சினிமா

தளபதி 63 படத்தில் விஜய்யின் கெட்டப் இதுதான்? வைரலாகும் புகைப்படம்!

Summary:

Vijay thalapthi 63 new getup goes viral

சர்க்கார் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் அட்லீயுடன் கூட்டணி சேர்ந்து தளபதி 63 படத்தில் நடித்துவருகிறார் தளபதி விஜய். தெறி, மெர்சல் என இரண்டு வெற்றிப்படங்களை கொடுத்த இந்த கூட்டணி மூன்றாவது முறையாக மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

தளபதி 63 படப்பிடிப்பு ஆரம்பமாகி வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார். மேலும், தளபதி 63 படம் விளையாட்டு சம்மந்தமான படமாக இருக்கும் என்றும், கால்பந்து அணியின் பயிற்சியாளராக விஜய் நடிப்பதாகவும், அதற்காக 16 பெண்கள் கால்பந்து அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் தளபதி 63 படத்தில் விஜயின் கெட்டப் குறித்து ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு துணை இயக்குனர் ஒருவரின் திருமணத்தில் விஜய் தனது குடும்பத்துடன் கலந்துகொண்டார். அந்த திருமண புகைப்படங்கள் வைரலாகியது.

அந்த புகைப்படத்தில் சால்ட் அண்ட் பேப்பர் ஸ்டைலில் விஜய் தோற்றமளித்தார். மேலும் விஜய்யின் கண் புருவத்தில் இரண்டு கோடு போட்டப்பட்டுள்ளது. இது தளபதி 63 படத்தின் கெட்டப் என கூறப்படுகிறது. இது உறுதியானால் இனி விஜய் ரசிகர்கள் பலரும் இந்த ட்ரெண்டை பாலோ செய்வார்கள் என்பது மட்டும் உறுதி.

 


Advertisement