சினிமா

விஜய் தொலைக்காட்சி விருதுகள்! யார்யாருக்கு என்னென்ன விருது கிடைத்துள்ளது தெரியுமா?? வாழ்த்தும் ரசிகர்கள்!!

Summary:


விஜய் தொலைக்காட்சியில் வித்தியாசமான கதைக்களத்துடன் ஏராளமான சீரியல்கள் மற்றும் திறமைக

விஜய் தொலைக்காட்சியில் வித்தியாசமான கதைக்களத்துடன் ஏராளமான சீரியல்கள் மற்றும் திறமைகளை ஊக்குவிக்கும் வகையிலும், ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்கவைக்கும் வகையிலும் ஏராளமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. இதற்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

இந்நிலையில் விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்குபெறும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் பெருமைப்படுத்தி, கெளரவிக்கும் வகையில் விஜய் தொலைக்காட்சி விருது வழங்கும் விழா நடைபெறும். அவ்வாறு இந்த ஆண்டும் விருது வழங்கும் விழா சமீபத்தில் கோலாகலமாக நடைபெற்றது. அதில் பல பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் சிறந்த மருமகளுக்கான விருதை ராஜா ராணி ஆலியா மானசா, சிறந்த நடிகைக்கான விருதை பாரதி கண்ணம்மா ரோஷினி, சிறந்த வில்லி விருதை பாரதிகண்ணம்மா  பரீனா, சிறந்த இயக்குனர் விருதை ராஜாராணி 2, பாரதி கண்ணம்மா தொடர்களின் இயக்குனர் பிரவீன் பென்னட், சிறந்த மாமியாருக்கான விருதை பாரதி கண்ணம்மா சவுந்தர்யா ஆகியோர் பெற்றுள்ளனர்.

மேலும் சிறந்த அம்மாவிற்கான விருதை பாக்கியலட்சுமி சுசித்ரா , சிறந்த துணை நடிகைக்கான விருதை பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமா, சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதை செந்தூரப்பூவே கனி நிவாஷினி, சிறந்த காமெடியன் விருதை புகழ், மற்றும் பிரபலமடைந்த ஜோடிக்கான விருதை ஷிவாங்கி, அஸ்வின் ஆகியோர் பெற்றுள்ளனர். மேலும் மக்களால் பெரிதும் விரும்பப்பட்ட நிகழ்ச்சிகான விருது குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.


Advertisement