vijay-speech-in-audio-launch
தமிழ் சினிமாவின் பிரபல மற்றும் முன்னணி நடிகரான தளபதியின் சர்க்கார் படம் தற்போது திரைக்கு வர தயாராக இருக்கும் நிலையில் நேற்று இசைவெளியீட்டு விழா நடந்து குறிப்பிடத்தக்கது. இந்த படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வர இருக்கிறது. இதனை சன் பிக்ச்சர்ஸ் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.
இசைவெளியீட்டு விழாவில் சர்க்கார் படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர். அவ்வப்போது அதில் கலந்துகொண்ட நிறையபேர் மேடையில் பேசினார்கள். தளபதி விஜயும் பேசினார். இந்நிலையில் விஜய் தனது மேடை பேச்சுகளில் எப்போதும் ஓர் குட்டி கதை ஒன்றை கூறுவார்.
அதேபோல நேற்றும் தளபதி விஜய் பேசுகையில் ஓர் மன்னர் கதையை கூறினார். அந்த கதை என்னவென்றால் ஓர் நாட்டில் ஓர் மன்னர் இருந்தார் அவர் ஒரு நாள் சாப்பிடுகையில் உப்பு குறைவாக இருந்தது அப்போது அரண்மனையில் உப்பு இல்லாத காரணத்தால், தனது சிப்பாயை அழைத்து ஊர்மக்களிடம் உப்பு வாங்கிவிட்டு வா. முக்கியமாக அவர்களிடம் அதற்குரிய பணத்தை கொடுத்து வாங்கிவிட்டு வா என கூறினிராம்.
ஏனென்றால் அங்கு அரசர் இலவசமாக பொருட்களை வாங்கினால் அவருக்கு கீழே இருப்பவர்களும் இலவசமாக வாங்குவார்கள் என கூறி சரியான தலைமை அமைந்தால் எல்லாம் சரியாக இருக்கும் என தனது அரசியல் கருத்தை மறைமுகமாக கூறிவிட்டார்.
மேலும் புழுக்கம் ஏற்பட்டால் அங்கு மழை வரும் அதேபோல இப்போது அதிகமாக கஷ்டப்பட்டால் அந்த கஷ்டத்தில் எழுந்து வருபவன் கீழ் நடக்கும் சர்கார் நன்றாக இருக்கும் என்று கூறினார்.
Advertisement
Advertisement