சம்பளமே வாங்காமல் நடித்துக் கொடுத்த விஜய் சேதுபதி.. எந்த திரைப்படத்திற்கு தெரியுமா.?Vijay sethupathy acting movie for free

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக நடித்து வருபவர் விஜய் சேதுபதி. இவர் தமிழில் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து வருகிறார். மேலும் ஆரம்ப காலகட்டத்தில் குணச்சித்திர கதாபாத்திரங்கள் நடித்துக் கொண்டிருந்த விஜய் சேதுபதி தற்போது படிப்படியாக உயர்ந்து கதாநாயகனாக நடித்து வருகிறார்.

vijay

சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான 'விக்ரம்' திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். முதன்முதலில் விஜய் சேதுபதி வில்லனாக இந்த திரைப்படத்தில் நடித்திருந்ததால் ரசிகர்கள் இவரின் நடிப்பை பெரிதும் பாராட்டி வந்தனர்.

இது போன்ற நிலையில், திண்டுக்கல லியோனியின் மகன் லியோ சிவகுமார் கதாநாயகனாக அறிமுகமான திரைப்படம் 'அழகிய கண்ணே' படத்தில் சஞ்சிதா ஷெட்டி கதாநாயகியாக நடித்திருக்கிறார். இப்படத்தை ஆர்.விஜயகுமார் என்பவர் இயக்கி இருக்கிறார்.

vijay

'அழகிய கண்ணே' திரைப்படத்தில் விஜய் சேதுபதி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படம் ஜூன் 23ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது போன்ற நிலையில் இப்படத்தில் விஜய் சேதுபதி சம்பளமே வாங்காமல் நடித்துக் கொடுத்திருக்கிறார். இந்த செய்தி வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் இடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.