2 ஹீரோயின்ஸ்.. நல்லா வாழ்ந்துருக்கீங்க! கலாய்த்த மனைவி! அதுக்கு விஜய் சேதுபதியின் பதிலை பார்த்தீங்களா!!

2 ஹீரோயின்ஸ்.. நல்லா வாழ்ந்துருக்கீங்க! கலாய்த்த மனைவி! அதுக்கு விஜய் சேதுபதியின் பதிலை பார்த்தீங்களா!!


vijay-sethupathi-wife-kidding-him-for-acting-with-2-her

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்து தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். இந்த படத்தில் ஹீரோயின்களாக நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் நடித்துள்ளனர். கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியான இந்த படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களையே பெற்றது.

இப்படம் முக்கோண காதல் கதையை மையமாக கொண்டது. காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து வித்தியாசமான கதையுடன் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் விஜய் சேதுபதி பல சுவாரசியமான விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார். 

vijay sethupathi

விஜய் சேதுபதியின் மனைவி காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் அவர் டாப் ஹீரோயின்களான சமந்தா மற்றும் நயன்தாராவுடன் நடித்தது குறித்து, நீங்கள் இரண்டு ஹீரோயின்களுடனும் நல்லா வாழ்ந்துருக்கீங்க.. என கேலி செய்தாராம். அதற்கு விஜய் சேதுபதி, 
உங்களுக்கு படத்தில் பார்க்கும்போது வாழ்ந்த மாதிரிதான் தெரியும் ஷூட்டிங்கில் வந்து பார்த்தால்தான் புரியும். நான் வாழ்ந்தேனே இல்லை,  வறுத்தெடுத்தாங்களான்னு என பதில் அளித்துள்ளாராம்.