சினிமா

சீக்கிரம் திரும்பி வாங்க சார்..! எஸ்.பி.பி அவர்களுக்காக உருகும் விஜய் சேதுபதி..! வைரலாகும் ட்விட்டர் பதிவு.!

Summary:

Vijay Sethupathi video for SPB

கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்கள் மீண்டு வரவேண்டும் என பிரார்த்தனை செய்வதாக பிரபல தமிழ் நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்களின் உடல் நிலை மிக மோசமாக இருந்த நிலையில் தற்போது அவர் உடல்நிலை சீராகி வருவதாகவும், எஸ்.பி.பி அவர்களுக்கு சுயநினைவு திரும்பிவிட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் ...

எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களின் உடல்நிலை மிக மோசமாக இருப்பதாக வெளியான தகவல்களை அடுத்து அவரது ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் உட்பட பலரும் அவருக்காக பிரார்த்தனை செய்யத் தொடங்கினார். 

இந்நிலையில் பிரபல தமிழ் நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "உலகில் எந்த நாட்டில் இருந்தாலும் மொழி, இனம், மதம் கடந்து அனைவரும் ஒன்று கூடி நம் திரு எஸ்பிபி அவர்கள் பூரண குணமடைந்து விரைவில் நலம் பெற பிரார்த்திப்போம் என்றும், விரைவில் திரும்பி வாங்க சார் என்றும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார் விஜய் சேதுபதி".


Advertisement