சினிமா

அட.. நடிகர் விஜய் சேதுபதியா இது! என்ன இப்படி பயங்கர கொடூரமாக மாறிட்டாரே! வீடியோவை கண்டு மிரண்டுபோன ரசிகர்கள்!!

Summary:

தெலுங்கு உப்பென்னா பட ட்ரெய்லரை கண்ட ரசிகர்கள் விஜய் சேதுபதியின் மிரட்டலான நடிப்பை கண்டு ஆடிப் போயுள்ளனர்.

தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களில் நடித்து, ஆண்டு முழுவதும் பிஸியாக முன்னணி நடிகராக கொடிகட்டி நடிகர் விஜய் சேதுபதி. ஹீரோவாக ஏராளமான படங்களில் கெத்து காட்டி வந்த அவர் தனது கதாபாத்திரம் குறித்து சிறிதும் கவலைப்படாமல் வில்லன், குணச்சித்திர வேடம், திருநங்கை  மற்றும் தற்போது அப்பா என அனைத்து கதாபாத்திரத்திலும் அசத்தலாக நடித்து  ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவருக்கென பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.

வில்லனாக அவதாரம் எடுத்த விஜய் சேதுபதி ரஜினியின் பேட்ட மற்றும் சமீபத்தில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்து மிரட்டி இருந்தார். அதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு என பல மொழிகளிலும் கால்பதித்து கலக்கி வரும் அவர் தற்போது உப்பென்னா என்ற தெலுங்கு படத்திலும் கொடூர வில்லனாக நடித்துள்ளார்.

 புச்சிபாபு சனா இயக்கியுள்ள இப்படத்தில் வைஷ்ணவ் தேஜ் ஹீரோவாகவும், க்ரித்தி ஷெட்டி ஹீரோயினாகவும் நடித்துள்ளார்கள். இதில் க்ரித்தியின் அப்பாவாக, மிரட்டலான வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். இப்படம் வரும் 12ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை கண்ட ரசிகர்கள் விஜய்சேதுபதியா  இது இப்படி, கொடூரமாக மிரட்டி இருக்கிறாரே என ஆச்சரியம் அடைந்துள்ளனர்.


Advertisement