ட்விட்டரில் டாப் ட்ரெண்டிங்கில் பேசப்படும் திருநங்கை யார் தெரியுமா ?

ட்விட்டரில் டாப் ட்ரெண்டிங்கில் பேசப்படும் திருநங்கை யார் தெரியுமா ?


vijay-sethupathi-twitter- Transgender-picture

ட்விட்டரில் டாப் ட்ரெண்டிங்கில் பேசப்படும் திருநங்கை யார் தெரியுமா ?

Tamil Spark

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் சூப்பர் டீலகஸ் படத்தில் ஷில்பா கதாபாத்திரத்தின் புதிய புகைப்படம் வைரலாகி வருகிறது.  

ரஜினி, கமல், சத்யராஜ் தொடங்கி பெரும்பாலான முன்னணி நடிகர்கள் பலரும் பெண் வேடம் அணிந்து நடித்துள்ளனர். தற்போது இந்த வரிசையில் விஜய் சேதுபதியும் சேர்ந்துள்ளார். தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகி வரும் படம் சூப்பர் டீலக்ஸ். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார். 

Tamil Spark

விஜய் சேதுபதி திருநங்கை கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. முன்னதாக கடந்த ஆண்டும் கூட ஒரு புகைப்படம் வெளியாகி பார்ப்பவர்களை எல்லாம் வியக்க வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் இந்த படத்தில் பகத் பாசில், சமந்தா, மிஷ்கின், ரம்யாகிருஷ்ணன், காயத்ரி உட்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் திரைக்கதையை தியாகராஜன் குமாரராஜாவுடன் இணைந்து நலன் குமாரசாமி, மிஷ்கின், நீலன் கே.சேகர் ஆகியோர் எழுதி உள்ளனர். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.