சினிமா

புதிய படம் குறித்த வீடியோவை வெளியிட்ட விஜய் சேதுபதி! மிரளவைக்கும் டைட்டில்! என்ன தெரியுமா?

Summary:

Vijay sethupathi post koronokumar movie promo

தமிழ் சினிமாவில் விஜய் மற்றும் ஸ்ரேயா நடிப்பில் வெளிவந்த ரௌத்திரம் என்ற திரைப்படத்தை இயக்கியவர் கோகுல். அதைத் தொடர்ந்து அவர் விஜய்சேதுபதி நடிப்பில் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் அப்படத்தின் வசனங்கள் மற்றும் பாடல்கள் பெருமளவில் பிரபலமானது.

அதனை தொடர்ந்து காஷ்மோரா, ஜூங்கா போன்ற படங்களை இயக்கிய கோகுல், தற்போது மலையாளத்தில் சூப்பர்ஹிட்டான ஹெலன் படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்கி முடித்துள்ளார். 

அதனைத் தொடர்ந்து கோகுல் கொரோனா குமார் என்ற திரைப்படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தில்  ஒரு விஷயத்தை செய்ய நினைக்கும்போது ஊரடங்கு அறிவித்துவிடுகின்றனர். அதைத்தொடர்ந்து நடக்கும் சுவாரசியமான விஷயங்களை  நகைச்சுவையாகவும்,  சமூக கருத்துக்களையும் கூறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படத்தின் புரோமோ வீடியோவை நடிகர் விஜய் சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.மேலும் லாக்டவுன் முடிந்தபிறகு படப்பிடிப்புகள் தொடங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 


Advertisement