சினிமா

அட.. இது வேற லெவல் கூட்டணி! கமல் படத்தில் இணையும் டாப் மாஸ் ஹீரோக்கள்! உற்சாகத்தில் ரசிகர்கள்!!

Summary:

அட.. இது வேற லெவல் கூட்டணி! கமல் படத்தில் இணையும் டாப் ஸ்டார்கள்! உற்சாகத்தில் ரசிகர்கள்!!

உலக நாயகன் கமல் எழுதும் கதையில், தயாரிப்பில் விஜய் சேதுபதி மற்றும் விக்ரம் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் கமல் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் இப்படத்தை அவரே தயாரித்தும் உள்ளார். இதில் கமலுக்கு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார். விஜய் சேதுபதி இதற்கு முன் ஏற்கனவே பேட்ட படத்தில் ரஜினிக்கு மற்றும் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து அவர் நடிகர் விக்ரமுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்க உள்ளாராம். இப்படத்திற்கு நடிகர் கமல்தான் கதை எழுதுகிறாராம். மேலும் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கவுள்ளதாம்.

விக்ரம், விஜய் சேதுபதி இணையும் படத்தை மலையாள இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கமல்ஹாசன் எழுதி தயாரிக்கும் படத்தில் விக்ரம் மற்றும் விஜய் சேதுபதி நடிக்கவுள்ள தகவல் பரவி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளிவரவில்லை. 


Advertisement