vijay-sethupathi-movies
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் தான் நம்ம விஜய் சேதுபதி அவர்கள். இவருக்கென தனியா ஒரு பாதை அமைத்து அதன் வழியே செல்வது தான் இவரது ஸ்பெஷல். இந்த ஆண்டு ஏற்கனவே இவருக்கு ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன், ஜூங்கா’ ஆகிய படங்கள் வெளியாகி உள்ளன. இந்த படங்களை ஒப்பிடுகையில் ஜூங்கா மட்டுமே மிக சுமாராக ஓடியது. எதிர்பார்த்த அளவு வசூலும் செய்யவில்லை மற்றும் ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றமும் அளித்தது குறிப்பிடத்தக்கது.
இன்னும் இந்த ஆண்டு முடிய நான்கு மாதங்கள் மீதம் உள்ள நிலையில் அவருக்கு இன்னும் நான்கு படங்கள் வெளியாகிவிடும் நிலையில் உள்ளது.
இந்நிலையில் இந்த மாதம் 27ம் தேதி, செக்க சிவந்த வானம் படம் வெளியாக இருக்கிறது. இதனை தொடர்ந்து அதற்கு அடுத்த வாரமே அக்டோபர் 4ம் தேதி ’96’ படம் வெளியாக உள்ளது.
இதேபோல் அடுத்த அடுத்த படம் ரிலீஸ் ஆகா ரெடியாக இருக்கிறது. அதன் பிறகு "சீதக்காதி" படமும் சூப்பர் டீலக்ஸ் படமும் வெளியாக திட்டம் செய்துள்ளார்கள். ஒரு வார இடைவெளிக்குள் ‘செக்க சிவந்த வானம், 96 ‘ ஆகிய படங்கள் வெளிவருவதும் உகந்த சூழல் அல்ல திரையுலகில் சிலர் கருதுகிறார்கள்.
ஆனால், ‘செக்க சிவந்த வானம் ‘ படம் மல்டி ஸ்டார் என்பதால் பிரச்சனையில்லை. மணிரத்தினம் படம் என்றுதான் பாராட்டுவார்கள். அதில் படித்தவர்களுக்கு அவ்வளவாக பெயர் கிடைக்காது. எனவே, அது விஜய் சேதுபதியை அதிகம் பாதிக்க வாய்ப்பு குறைவு தான்.
’96’ படம் மீது எதிர்பார்ப்பு இருப்பதால் அதன் ரிசல்ட் தான் விஜய் சேதுபதியின் அடுத்த வெளியீடுகளான ‘சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ்’ ஆகிய படங்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. எனவே நடிகர் விஜய் சேதுபதியின் இனிவரும் படங்கள் ஓடுமா ஓடாதா என்ற கேள்வி எழுத்துள்ளது..
Advertisement
Advertisement