தெலுங்கில் தயாராகும் ராட்சசன் 2 ! அப்படி போடு.. ஹீரோவாக நடிக்கப்போவது இவரா! செம சர்ப்ரைஸில் ரசிகர்கள்!

தெலுங்கில் தயாராகும் ராட்சசன் 2 ! அப்படி போடு.. ஹீரோவாக நடிக்கப்போவது இவரா! செம சர்ப்ரைஸில் ரசிகர்கள்!



vijay-sethupathi-may-be-act-as-hero-in-telungu-rakshasu

கடந்த 2011 ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ராட்சசன். இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் சாதனை படைத்தது. ராம்குமார் இயக்கத்தில் வெளிவந்த இப்படம் நடிகர் விஷ்ணு விஷாலின் திரை வாழ்க்கையில் முக்கிய படமாக அமைந்தது.

சைக்கோ த்ரில்லர் படமான இதில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அமலாபால் நடித்திருந்தார். ராட்சசன் படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படம் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. மேலும் தெலுங்கில் ராட்சசுடு என்ற பெயரில் ரீமேக்கானது. இதில் பெல்லம்கொண்டா சீனிவாஸ் ஹீரோவாக நடித்திருந்தார்.

vijay sethupathiஇப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தை இயக்கிய ரமேஷ் வர்மாவே இப்படத்தையும் இயக்கவுள்ளார். இந்நிலையில் இயக்குனர் ரமேஷ் வர்மா சென்னை வந்து விஜய் சேதுபதியை சந்தித்து அப்படத்தின் கதை கூறியதாகவும், விஜய் சேதுபதி இப்படத்தில் ஹீரோவாக நடிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் பரவிவருகிறது.