அட, மாஸ்டர் படத்திற்காக நம்ம விஜய் சேதுபதி இந்த வேலையும் பார்த்துள்ளாரா! வெளியான மாஸ் தகவல்!

அட, மாஸ்டர் படத்திற்காக நம்ம விஜய் சேதுபதி இந்த வேலையும் பார்த்துள்ளாரா! வெளியான மாஸ் தகவல்!


vijay-sethupathi-dubbing-in-master-movie

மாநகரம், கைதி போன்ற வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து முடித்துள்ள படம் தான் மாஸ்டர். இப்படத்தில்  கதாநாயகியாக மாளவிகா மோகன் மற்றும் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். மேலும் அவர்களுடன் ஆன்ட்ரியா, கௌரி கிஷன், சாந்தனு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவுற்ற நிலையிலும், தற்போது நாடு முழுவதும் ஏற்ப்பட்ட கொரோனா பாதிப்பு காரணமாக படம் வெளியாகாமல் இருந்து வருகிறது.  இந்நிலையில் படம் வெளியாகும் நாளுக்காக ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

master

இந்நிலையில் இந்த திரைப்படம் குறித்து சுவாரசியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது மாஸ்டர் திரைப்படத்தில் வில்லனாக நடிக்கும் விஜய் சேதுபதியின் சிறுவயது கதாபாத்திரத்தில் மாஸ்டர் மகேந்திரன் நடித்துள்ளாராம். மேலும் தனது சிறுவயது கதாபாத்திர குரலில் கூட  வித்தியாசம் தெரிய கூடாது, அது விஜய் சேதுபதிதான் என ரசிகர்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக அந்த கதாபாத்திரத்துக்கும் விஜய் சேதுபதியே டப்பிங் பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.