சினிமா

அட.. நடிகை விஜய் சேதுபதியின் மகளா இது? நடிப்புல அப்பாவையே மிஞ்சிடுவார் போல! வைரலாகும் வீடியோ!

Summary:

விஜய் சேதுபதி மகள் ஸ்ரீஜா நடிப்பில் உருவாகியுள்ள முகிழ் படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக செம பிசியாக  இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் இறுதியாக க/பெ.ரணசிங்கம் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. மேலும் வில்லனாகவும் அவதாரமெடுத்து அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லனாக நடித்திருக்கிறார். இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது.

அதனை தொடர்ந்து அவரது கைவசம் கடைசி விவசாயி, உப்பென்னா, மாமனிதன், லாபம், யாதும் ஊரே யாவரும் கேளிர், லால் சிங் சத்தா, துக்ளக் தர்பார், காத்துவாக்குல ரெண்டு காதல், கொரோனா குமார், அண்ணபெல்லே சுப்பிரமணியம், 19 (1) (a) என ஏராளமான படங்கள் உள்ளன.  நடிகர் விஜய் சேதுபதிக்கு சூர்யா என்ற மகனும், ஸ்ரீஜா என்ற மகளும் உள்ளனர். இவர்களில் சூர்யா ஏற்கனவே சிந்துபாத் என்ற படத்தில் நடித்திருந்தார்.

அதனை தொடர்ந்து தற்போது விஜய் சேதுபதியின் மகள் ஸ்ரீஜா முகிழ் என்ற படத்தின் மூலம் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியுள்ளார். கார்த்திக் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் ரெஜினா கசாண்ட்ரா இருவரும் நடித்துள்ளனர். இதன் டிரைலர் இன்று வெளியாகி, இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும்  ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரப்பேற்பை பெற்றுள்ளது. 


Advertisement