எஸ்கேப்பான விஜய் சேதுபதி! 800 பட சர்ச்சையால் செய்தியாளர்கள் சந்திப்பு தவிர்ப்பு!



Vijay sethupathi avoids to meet press due to 800 movie issue

சென்னையில் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை விஜய் சேதுபதி செய்தியாளர்களை சந்திக்காமல் அங்கிருந்து நகர்ந்து சென்றார்.

இலங்கை தமிழரான பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படமான 800 படத்தில் நடிகை விஜய் சேதுபதி நடிப்பதாக ஒப்பந்தமாகி, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதில் இருந்தே விஜய் சேதுபதிக்கு எதிராக பல்வேறு சர்ச்சைகள் எழுந்தவண்ணம் உள்ளது.

சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் விஜய் சேதுபதி இந்த படத்தில் நடிக்க கூடாது எனவும் அவர் இந்த படத்தில் இருந்து உடனே விலகவேண்டும் எனவும் கோரிக்கை வைத்து வருகின்றனர். அதேநேரம் ஒருசிலர் விஜய் சேதுபதிக்கு ஆதரவும் தெரிவித்துள்ளனர்.

vijay sethupathi

ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக விஜய் சேதுபதி எந்த ஒரு கருத்தும் தெரிவிக்காமல் இருந்து வருகிறார். மேலும் 800 படத்தின் சர்ச்சைக்கு பிறகு வர பொது நிகழ்ச்சிகள் கலந்துகொள்வதையும் தவிர்த்துவருகிறார்.  இந்நிலையில் சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் நடந்த இயற்கைபானம்  தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் விஜய் சேதுபதி கலந்துகொண்டார்.

அந்த நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி மேடையில் பேசுவார் என அனைவரும் எதிர்பார்த்தநிலையில், அவர் மேடையில் பேசவில்லை. அதேபோல் விஜய் சேதுபதி அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வது தெரிந்து பத்திரிகையாளர்களும் அங்கு குவிந்தனர். இறுதியில் பத்திரிகையாளர்களையும் சந்திக்காமல் விஜய் சேதுபதி அங்கிருந்து சென்றுவிட்டார்.