சினிமா

முதல்ல வேன், அப்புறம் பஸ்.. ஒரே செல்பிதான்! மாஸ்டர் படபிடிப்பில் மாஸ் காட்டும் தளபதி! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!

Summary:

vijay selfi in shooting spot

தமிழ்சினிமாவில் ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக கொடிகட்டி பறப்பவர் நடிகர் விஜய். இவருக்கென உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. மேலும் இவரது பிறந்தநாள் மற்றும்  படம் வெளியாகும் நாட்களை ரசிகர்கள் திருவிழாக்களை போல கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

 இந்நிலையில் இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த பிகில் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து அவர் தற்போது மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் அதற்காக படப்பிடிப்பிலும் ஈடுபட்டு வருகிறார்.

 

இந்நிலையில் அவர் தற்போது நெய்வேலியில் படபிடிப்பில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் தளபதியை காண ஏராளமான ரசிகர்கள் நெய்வேலி நோக்கி படையெடுத்து வருகின்றனர். மேலும் நடிகர் விஜயை பார்க்க வேண்டும் அவருடன் செல்பி எடுத்துக்கொள்ள வேண்டும் என பலரும் தவமாய் காத்திருக்கின்றனர். இந்நிலையில் நடிகர் விஜய் ரசிகர்களே ஆச்சரியப்படும் வகையில் வேன் மீது ஏறி ரசிகர்களுடன் ஒன்றாக செல்பி எடுத்துள்ளார்.

அந்த செல்பி சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது. மேலும் மாஸ்டர் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை விட இந்த ஒரு செல்பி அதிக லைக்ஸ்களை பெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று அவர் தனது இறுதி செல்பி எடுத்ததை போன்று இன்று பஸ் மீது ஏறி நின்று ரசிகர்களுடன் செல்பி எடுத்துள்ளார். இந்நிலையில் விஜய் ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர்.


Advertisement