வாவ்..செம கியூட்ல! இரு பெண்களுக்கு நடுவே ஹாயாக அமர்ந்திருக்கும் தளபதி விஜய்! வைரலாகும் பள்ளி பருவ அரிய புகைப்படம்!!

வாவ்..செம கியூட்ல! இரு பெண்களுக்கு நடுவே ஹாயாக அமர்ந்திருக்கும் தளபதி விஜய்! வைரலாகும் பள்ளி பருவ அரிய புகைப்படம்!!



vijay-schoolhood-photo-viral

தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் மாஸ் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக கொடிகட்டி பறப்பவர் தளபதி  விஜய். இவருக்கென நாடு முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. மேலும் ரசிகர்கள் இவரது படங்கள் வெளியாகும் நாட்கள், மற்றும் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடுவர்.

மேலும் தற்போது கொரோனாவால் தமிழகம் பல சவால்களை சந்தித்து வரும்நிலையில் விஜய் ரசிகர்கள் பலரும் கஷ்டப்படும் மக்களுக்கு ஏராளமான உதவிகளை செய்து வருகின்றனர். தளபதி விஜய் தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தனது 65வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இதன் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்தது. மேலும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

vijay

இந்நிலையில், தற்போது தளபதி விஜய் பள்ளிப் பருவத்தில் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் தளபதி விஜய் மாணவிகளுக்கு நடுவே செம கியூட்டாக அமர்த்திருக்கிறார். அதை ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.