சினிமா

ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம்..! பார்ட்டியில் விஜய் போட்ட குத்தாட்டம்..! இணையத்தில் வைரலாகும் வீடியோ.

Summary:

Vijay nanban success meet dance viral video

இந்திய அளவில் பேசப்படும் மிக பிரபலமான தமிழ் நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். மாஸ்டர் படம் கொரோனா ஊரடங்கு காரணமாக வெளியாவதில் தாமதம் ஏறப்டுள்ளது.

இந்நிலையில் விஜய்யின் ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது. கடந்த 2009 ஆம் ஆண்டு இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான நண்பன் படத்தின் வெற்றி விழா கொண்டாட்டத்தில் விஜய் சக நடிகர்கள் ஜீவா, ஸ்ரீகாந்துடன் இனைந்து குத்தாட்டம் போட்ட வீடியோ தான் அது.

இந்த சம்பவம் நடந்து நீண்ட நாட்களாகி இருந்தாலு ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டில் வெட்டியாக இருக்கும் நெட்டிசன்கள் தேடி கண்டுபிடித்து இந்த வீடியோவை வைரலாகிவருகின்றனர்.


Advertisement