விஜய் எங்களை மதிக்கலையா.! ஆடியோ லாஞ்சில் நடந்தது இதுதான்! உண்மையை விளக்கிய அம்மா ஷோபா!!

விஜய் எங்களை மதிக்கலையா.! ஆடியோ லாஞ்சில் நடந்தது இதுதான்! உண்மையை விளக்கிய அம்மா ஷோபா!!


vijay-mother-talk-about-what-happened-in-varisu-audio-l

தமிழ் சினிமாவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டு முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். இறுதியாக இவரது நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற திரைப்படம் வாரிசு. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது.

அதில் திரைப்பிரபலங்கள், படக்குழுவினர்கள் பலரும் கலந்துகொண்டனர். மேலும் அவர்களுடன் நடிகர் விஜய்யின் பெற்றோர்களான ஷோபா மற்றும் எஸ்.ஏ சந்திரசேகர் ஆகியோரும் கலந்துகொண்டனர். இந்த நிலையில் விஜய் விழா அரங்கிற்குள் என்ட்ரி கொடுத்ததும் அங்கிருந்த படக்குழுவினர் அனைவரும் அவருக்கு கை கொடுத்து, கட்டியணைத்து வரவேற்றனர். அப்பொழுது தாய் ஷோபாவும், தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரும் விஜய்யை பார்த்து எழுந்து நின்றுள்ளனர். அப்போது, விஜய் அவரது அம்மாவிற்கு கை கொடுத்துவிட்டு, அப்பாவை கட்டிபிடித்துவிட்டு அன்பை வெளிப்படுத்தி சென்றார்.

vijay

இதற்கிடையில் நடிகர் விஜய் தனது பெற்றோரை கண்டுகொள்ளாமல் மதிக்காமல் சென்றதாக வீடியோவை சிலர் வைரலாக்கினர். இந்த நிலையில் விஜய்யின் அம்மா ஷோபா பேட்டி ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, விஜய்யின் பெற்றோராகிய நாங்கள் விருந்தினர்களாக மட்டுமே வாரிசு இசை வெளியீட்டு விழாவிற்கு சென்றோம்.

அங்கு விஜய்யின் வேலை ரசிகர்களை திருப்திபடுத்துவதுதான். அங்கு எங்களை கவனிக்க வேண்டுமென நாங்கள் எதிர்பார்க்கவில்லை. விஜய்க்கு கிடைத்த மாபெரும் வரவேற்பை பார்த்து சந்தோஷத்தில் நாங்கள் வாயடைத்து போயிருந்தோம். நாங்கள் வீட்டில் தினமும் பார்க்கிறோம், பேசி கொள்கிறோம். அதனால் பொதுவெளியிலும் அவர் எங்களை கவனிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. மற்றபடி மீடியாக்களில் வரும் தகவல்கள் உண்மையில்லை என கூறியுள்ளார்.