விஜய் மக்கள் இயக்க தலைவர் விடுத்த எச்சரிக்கை.. அதிர்ந்து போன ரசிகர்கள்.?
நடிகர் விஜய் அரசியலுக்கு வரப்போவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், கடந்த சில மாதங்களாகவே, விஜயின் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அடிக்கடி நடந்து கொண்டிருக்கிறது.
இந்தவகையில், இன்று (ஆகஸ்ட் 26) சென்னை பனையூரில், விஜய் மக்கள் இயக்கத்தின் ஐடி விங் பிரிவின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேசினார்.
அந்தக் கூட்டத்தில் அவர் கூறியதாவது, "நாம் விஜய் ரசிகர் மன்றமாகத் தொடங்கி இன்று விஜய் மக்கள் இயக்கமாகத் தொடந்து வருகிறோம். இப்போது நம் இயக்கம் தமிழகத்தின் பலம் வாய்ந்த இயக்கமாக மாறியுள்ளது. இதற்காகத் தொடர்ந்து பல முன்னெடுப்புகளை நாம் எடுத்து வருகிறோம்.
இந்நிலையில், தலைமையின் ஒப்புதல் இல்லாமல் நீங்கள் யாரும் மற்றவர்களின் பதிவுகளை பதிவிடவோ கருத்து தெரிவிக்கவோ கூடாது. ஆபாசக் கருத்துக்களை வெளியிடக் கூடாது. உங்கள் பதிவுகள் மற்றும் பதில்கள் அனைத்தும் கருத்தியல் சார்ந்ததாக மட்டுமே இருக்க வேண்டும்" என்று புஸ்ஸி ஆனந்த் பேசினார்.