சினிமா

நண்பன் சஞ்சீவ்வின் அக்கா மகள் திருமணத்தில் குடும்பத்தோடு கலந்துகொண்ட தளபதி விஜய்! தீயாய் பரவும் புகைப்படம்!

Summary:

நண்பன் சஞ்சீவ்வின் அக்கா மகள் திருமணத்தில் குடும்பத்தோடு கலந்துகொண்ட தளபதி விஜய்! தீயாய் பரவும் புகைப்படம்!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் சஞ்சீவ். இதனைத் தொடர்ந்து அவர் திருமதி செல்வம் தொடரில் முக்கிய ஹீரோவாக நடித்து மக்கள் மத்தியில் நன்கு பரிச்சயமானார். பின்னர் அவர் பல தொலைக்காட்சித் தொடர்களிலும், வெள்ளிதிரையில் ஏராளமான படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.

இவர் தளபதி விஜய்யின் நெருங்கிய நண்பர் ஆவார். கல்லூரி படிக்கும் போதிலிருந்தே இருவரும் நல்ல நண்பர்கள். மேலும் சஞ்சீவ் விஜய்யின் படங்களிலும் நடித்துள்ளார். சஞ்சீவ் தற்போது பிக்பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். இவர் அண்மையில் டாஸ்க் ஒன்றில் தனது அக்காவின் மறைவு குறித்து பகிர்ந்திருந்தார்.

 அவரது அக்கா நடிகை சிந்து. அவர் இணைந்த கைகள் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். மேலும் பல படங்களிலும், சின்னத்திரை தொடர்களிலும் நடித்து  பெருமளவில் பிரபலமானவர். அவருக்கு ஆஸ்துமா மற்றும் நுரையீரல் பிரச்சினை இருந்த நிலையில் 33 வயதில் உயிரிழந்துள்ளார். சிந்துவின் மகள் ஸ்ரேயா. சிந்து மறைவின்போது அவருக்கு 9 வயதே ஆகியுள்ளது.

பின்னர் சஞ்சீவ்வே தந்தை ஸ்தானத்திலிருந்து ஸ்ரேயாவை வளர்த்து அஸ்வின் ராம் என்பவருக்கு திருமணம் செய்துக் கொடுத்துள்ளார். அஸ்வின் ராம் ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் உருவாகியுள்ள அன்பறிவு படத்தின் இயக்குனர் ஆவார். ஸ்ரேயா- அஸ்வின்  திருமணத்தில் சஞ்சீவ்வின் நெருங்கிய நண்பரும், நடிகருமான விஜய் தனது அம்மா மற்றும் மனைவியுடன் கலந்து கொண்டுள்ளார். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement