சினிமா

எத்தனை முறை ஒளிபரப்பானலும் தளபதியின் இந்த படம் தான் டிஆர்பியில் பட்டையைக் கிளப்பும்.!எந்த படம் தெரியுமா?

Summary:

Vijay in killi movie is TRB king

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் கொண்டாடக்கூடிய ஒரு முன்னணி நடிகர். இவர் இதுவரை 600க்கும் மேற்ப்பட்ட படங்களில் நடித்துள்ளார். அதில் பல படங்கள் மெகா ஹிட்டையும், வசூல் ரீதியாகவும் பல்வேறு சாதனைகளையும் படைத்துள்ளது.

மேலும் தளபதி விஜய்க்கு தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான பிகில் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது மாநகரம், கைதி போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். இப்படம் நேற்று வெளியாவதாக இருந்தது. ஆனால் தற்போது நாடு கொரோனா எதிரொலியால் அப்படம் திரைக்கு வர தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தளபதி விஜய் நடிப்பில் 2004 ஆம் ஆண்டு வெளியான படம் தான் கில்லி. இப்படம் சமீபத்தில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பரப்பட்டது. அப்போது அந்த படம் தான் டிஆர்பியில் பட்டையைக் கிளப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் எத்தனை முறை ஒளிப்பரப்பானாலும் மாஸ் குறையாமலும், ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது கில்லி திரைப்படம். இந்நிகழ்வு விஜய் ரசிகர்களுக்கு சந்தோஷத்தை ஏற்ப்படுத்தியுள்ளது. 


Advertisement