சினிமா

ஏழைகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பி இன்ப அதிர்ச்சி கொடுத்துவரும் நடிகர் விஜய்.! தொடங்கியது அடுத்த அதிரடி.!

Summary:

Vijay helps for poor people

கொரோனா தடுப்பு நிவாரண பணிக்காக சினிமா பிரபலங்கள் பலரும் தங்களால் முடிந்த நிதியை வழங்கி வருகின்றனர். அந்தத் வகையில் தளபதி விஜய் சமீபத்தில் பிரதமர் நிவாரண நிதி, தமிழக முதல்வர் நிவாரண நிதி என சுமார் 1.30 கோடி நிதியுதவி அளித்திருந்தார்.

இந்நிலையில், மத்திய சென்னை பகுதியில் மிகவும் கஷ்டப்படும் இளைஞர் ஒருவரின் வாங்கி கணக்கில் விஜய் அறக்கட்டளை மூலமாக சுமார் 10 ஆயிரம் பண உதவி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த பகுதி விஜய் நற்பணி மன்றத் தலைவர் மூலம் மோகன் என்கிற இளைஞர் மிகவும் கஷ்டப்படுவதாகவும், அவருடைய அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என்றும் வங்கிக் கணக்கு உள்ளிட்ட விவரங்களை விஜய்க்கு அனுப்பி வைத்துள்ளார்.

அள்ளிக்கொடுத்த தளபதி விஜய் ...

உடனே மோகனின் வங்கிக் கணக்கிற்கு 10,000 ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. மேலும், இதுபோன்ற சிரமத்தில் இருக்கும் பலரது பெயர்கள் லிஸ்டில் இருப்பதாகவும், அவர்கள் அனைவர்க்கும் விஜய் உதவ இருப்பதாகவும் கூறப்படுகிறது.


Advertisement