சினிமா Covid-19

அள்ளிக்கொடுத்த தளபதி விஜய்..! தமிழ்நாட்டுக்கு மட்டுமில்லாமல் 6 மாநிலத்துக்கு வாரிவழங்கிய விஜய்.! எவ்வளவு தெரியுமா.?

Summary:

Vijay gave corono relief fund

உலகளவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துவருவதால் வரும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய, மாநில அரசுகள் கொரோனாவை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், கொரோனவை கட்டுப்படுத்தவும், மக்களுக்கு உதவி செய்யவும் அரசுக்கு நிதியுதவி அளிக்குமாறு, பிரதமர் மற்றும் தமிழக முதல்வர் மக்களிடம் கேட்டுக் கொண்டனர். இதனை அடுத்து, பல்வேறு முன்னணி நிறுவனங்கள், விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் முதல்வர் மற்றும் பிரதமரின் நிவாரண நிதிக்கு நிதியுதவி அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் விஜய் மொத்தம் 1.30 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார். பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம், தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம், கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு  ரூ.10 லட்சம், கர்நாடக, ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி முதல்வர் நிவாரண நிதிக்கு தலா ரூ. 5 லட்சம் என மொத்தம் 1.30 கோடி வழங்கியுள்ளார் தளபதி விஜய்.


Advertisement