
Vijay funny dance video with Kajal Agarwal viral video
டச்சப் செய்யும் கண்ணாடியை நடிகை காஜல் அகர்வால் முன்னே காட்டி காஜல் அகர்வாலை கலாய்த்து விஜய் அழகாக நடனமாடும் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகிவருகிறது.
தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்தில் இருக்கும் நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். படத்தின் வேலைகள் அனைத்தும் முடிந்து விட்டாலும் கொரோனா ஊரடங்கு காரணமாக படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
பொதுவாக நடிகர் விஜய் மிகவும் அமைதியானவர் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இந்நிலையில் விஜய் படப்பிடிப்பின்போது மிகவும் கலகலப்பாக நடிகை காஜல் அகர்வாலை கலாய்த்து நடனம் ஆடியுள்ள வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகிவருகிறது.
அந்த வீடியோ காட்சியில், காஜல் அகர்வால் நடன குழுவினருடன் நடனம் ஆடிக் கொண்டிருக்கையில் கையில் டச்சப் செய்யும் கண்ணாடியுடன் உள்ளே நுழையும் விஜய் காஜல் அகர்வால் முன் அந்தக் கண்ணாடியை காட்டி அவருடன் சேர்ந்து நடனம் ஆடுகிறார்.
செட்டில் எப்போதும் டச்சப் செய்து கொண்டிருக்கும் நடிகை காஜல் அகர்வாலை கலாய்க்கவே விஜய் இது போன்ற நடனம் ஆடியுள்ளார். இந்த வீடியோவை பார்த்த தளபதி ரசிகர்கள் தளபதி செட்டில் இவ்வளவு ஜாலியாக இருப்பார் என வியப்புடன் பார்த்து வருகின்றனர்.
These are just cute moments 😍@MsKajalAggarwal || @actorvijay pic.twitter.com/y7GFgJcOnp
— Kingslayer VJ (@Kingslayer_Vj) August 31, 2020
Advertisement
Advertisement