அவர வெளில வரச்சொல்லு!! விஜய் வீட்டின் முன் ரசிகர்கள் தர்ணா!! என்ன காரணம் தெரியுமா.?vijay-fans-protest-in-front-of-vijay-home

நடிகர் விஜய் நேற்று தனது 47 வது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், அவரது ரசிகர்கள் முதல் பலவேறு சினிமா பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து கூறிவந்தனர். விஜய் தற்போது நடித்துவரும் ‘பீஸ்ட்’ படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டதால் விஜய் ரசிகர்கள் மிகவும் உற்சாகம் அடைந்தனர்.

இந்தநிலையிள், நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க அவரது வீட்டு முன் நேற்று ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். சிலர் பரிசு பொருட்களுடன், எப்படியும் விஜய் வெளியில் வருவார் என ஆர்வமுடன் காத்திருந்துள்ளனர். ஒருகட்டத்தில் விஜய் வீட்டில் இல்லை என்று கூறியும், ரசிகர்கள் அங்கேயே நின்றுள்ளனர்.

vijayஇதனையடுத்து அங்கிருந்த விஜய் ரசிகர்கள், திடீரென நடிகர் விஜய் வீட்டில் இருந்து வெளியில் வந்து தங்களைப் பார்க்க கோரிக்கை வைத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் தர்ணாவில் ஈடுபட்ட விஜய் ரசிகர்களை அப்புறப்படுத்தினர்.