தளபதி விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்...! காரணம் என்ன?vijay-fans-happy-moments

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் அவர்கள் தற்போது நடித்து வெளிவர இருக்கும் திரைப்படம் "சர்க்கார்". இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு மற்றும் எதிர்பார்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது என்று தான் கூற வேண்டும். 

மேலும் இந்த படத்தின் பாடல் ஒன்று "சிம்டான்காரன்" சமீபத்தில் வெளியாகி  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் காந்தி ஜெயந்தி அக்.2ம் தேதி அன்று  நடைபெற உள்ளது. 

இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு மிகக்குறைந்த ரசிகர்கள் மட்டுமே அனுமதிக்க உள்ளதாக தெரிவித்த நிலையில், இந்த நிகழ்ச்சியை சன் டிவி நிறுவனம் நேரடியாக ஒளிபரப்ப முடிவு செய்துள்ளது. எனவே வரும் காந்தி ஜெயந்தி அக்.2ம் தேதி அன்று  மாலை 6.30 மணி அளவில் நேரடி ஒளிபர உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் திகைதுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ரசிகர்கள் அனைவரும் அவரவர் சமூக வலைதள பக்கத்தில் சன் டிவி நிறுவனத்திற்கு நன்றிகளை தெயவிது வருகின்றனர்...