"தளபதியே தேவையில்லை.. யாருக்காக இவ்ளோ பண்றோம்". - நடிகர் விஜய்யால் கொந்தளித்த ரசிகர்கள்..! அப்படி என்னதான் நடந்தது?..!!vijay-fans-angry-moment

இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துவரும் திரைப்படம் வாரிசு. இப்படம் தெலுங்கு மற்றும் தமிழில் நேரடியாக வெளியாக இருக்கிறது. இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகர் ராஷ்மிகா மந்தனா நடித்துவரும் நிலையில், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகிபாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். 

vijay

இப்படத்தில் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்தமாத இறுதிக்குள் முழு படப்பிடிப்பு முடிவடைந்து விடும் என்று கூறப்படுகிறது. தற்போது இப்படத்தின் சூட்டிங் சென்னை எண்ணூரில் நடைபெறுகிறது எனன்ற தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் ரசிகர்கள் விஜய்யை காண குவிந்ததால் போலீசார் தடியடி நடத்தியுள்ளனர். 

vijay

இதனால் ரசிகர்கள், "யாருக்காக இதெல்லாம் செய்கிறோம். எங்களுக்கு தளபதியே தேவையில்லை. அவரை பார்க்க ஆசையாக உள்ளது. அவர் வாசல் முன்வந்து கையசைத்தால் போதும். ரஜினி, சூர்யா வந்தபோது ரசிகர்களை அனுமதித்தார்கள் தளபதி வந்தால் மட்டும் ஏன் அனுமதிக்கவில்லை? என்று கோபத்தில் பேசியுள்ளனர்.