சினிமா

ரசிகரின் வீட்டிற்கு சென்று விஜய்யின் குடும்பத்தினர்கள் செய்த காரியத்தை பார்த்தீர்களா! வைரலாகும் புகைப்படங்கள்!

Summary:

Vijay family went fan house surprisely

தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக கொடிகட்டி பறப்பவர் நடிகர் விஜய். இவருக்கென உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. மேலும் இவரது பிறந்த நாள் மற்றும் படங்கள் வெளியாகும் தினங்களை ரசிகர்கள் திருவிழாக்களை போல கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற படம் பிகில்.

அதனை தொடர்ந்து அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 64 வது படமான மாஸ்டர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, கவுரி கி‌ஷன், வி.ஜே.ரம்யா, ஸ்ரீமன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 
மேலும் மாஸ்டர் திரைப்படத்தை 2020ம் ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் விஜய்யை ஒருமுறையாவது காண வேண்டும் என ரசிகர்கள் தவமாய் தவமிருக்கும் நிலையில் தளபதியின் பெற்றோர்கள் எஸ். ஏ. சந்திரசேகர் மற்றும் சோபா சந்திரசேகர் இருவரும் இணைந்து விஜய்யின் ரசிகர் வீட்டிற்கு சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர். 

அவர்களை விஜயின் ரசிகர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அதுமட்டுமின்றி விஜய்யின் தாயார் ஷோபா அவர்கள் ரசிகரின் வீட்டு சமையலறைக்கு சென்று சமைத்துள்ளார். இதனால் ரசிகர்கள் பெரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

 


Advertisement