" ராஷ்மிகாவுடன் அந்த விஷயம் நடப்பதற்காகதான் காத்துகொண்டிருக்கிறேன்" விஜய் தேவகொண்டாவின் வைரல் பேட்டி..



vijay-devakonda-viral-interview

தெலுங்கு திரையுலகில் ஆன்ஸ்கிரீனில் ரசிகர்களின் மனம் கவர்ந்த ஜோடி என்றால், அது ராஷ்மிகா- விஜய் தேவரகொண்டா ஜோடி தான். இவர்கள் இணைந்து நடித்த "கீதா கோவிந்தம்" படம் சூப்பர் ஹிட்டானது.

vijay

இரண்டாவதாக இவர்கள் இணைந்து நடித்த "டியர் காம்ரேட்" படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. எனினும், மீண்டும் இந்த ஜோடி இணைந்து நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் குஷி படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விஜய் தேவரகொண்டாவிடம் "ராஷ்மிகாவுடன் மீண்டும் எப்போது இணைவீர்கள் ?" என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "நானும் ராஷ்மிகாவுடன் திரையைப் பகிரக் காத்திருக்கிறேன். ஆனால் நல்ல ஸ்கிரிப்ட் அமையவேண்டும். "என்று கூறினார்.

vijay

இதற்கிடையில், விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகாவும் டேட்டிங் செல்வதாக பல வருடங்களாக கூறப்பட்டு வருகிறது. ஆனால் இருவருமே இதற்கு எந்த விதமான பதிலும் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.