சினிமா

மீண்டும் இணையும் விஜய் அட்லி கூட்டணி...!

Summary:

vijay-atlee-joins-next-film

தமிழ் சினிமாவின் பிரபல மற்றும் முன்னணி நடிகரான தளபதியின் சர்க்கார் படம் தற்போது திரைக்கு வர தயாராக இருக்கும் நிலையில் நேற்று இசைவெளியீட்டு விழா நடந்து குறிப்பிடத்தக்கது. இந்த படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வர இருக்கிறது. இதனை அடுத்து தளபதி விஜயுடன் மீண்டும் இணைய உள்ளார் இயக்குனர் அட்லீ. இவர்கள் இருவரும் இணையும் மூன்றாவது படம் ஆகும். 

இந்நிலையில் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் நடிகைகள் தெரியுமாத நிலையில், தற்போது கிடைத்துள்ள தகவலின் படி பெரும்பாலும் அனிரூத் தான் இப்படத்தின் இசையமைப்பாளராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்தால் விஜயுடன் இரண்டாவது முறை மற்றும் இயக்குனர் அட்லீயுடன் முதல் முறை ஆகும். 

இந்த தகவல் தெரிந்ததும் விஜய் ரசிகர்கள் அதிக உற்சாகத்துடன் அவரவர் சமூக வலைதள பக்கத்தில் இந்த செய்தியை பகிர்ந்து வருகிறார்கள். 


Advertisement