வாவ்.. நடிகர் விஜய் ஆண்டனியின் மனைவி இவர்தானா! பப்ளியா செம கியூட்டா இருக்காரு பார்த்தீர்களா!!



vijay-antony-wife-photo-viral

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், இசையமைப்பாளராகவும் கொடிகட்டி பறந்து வருபவர் விஜய் ஆண்டனி. இவர் விஜய் நடிப்பில் வெளிவந்த சுக்ரன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து அவர் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் இசையமைத்துள்ளார். மேலும் இவரது பாடல்கள் பலவும் பட்டி தொட்டியெல்லாம் ஒலித்து பெருமளவில் பிரபலமாகியுள்ளது.

அதனைத் தொடர்ந்து ஹீரோவாக களமிறங்கிய விஜய் ஆண்டணி நான், சலீம், சைத்தான், காளி, அண்ணாதுரை, எமன், பிச்சைக்காரன், திமிருபிடிச்சவன் கொலைகாரன் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்து மிரட்டியுள்ளார். மேலும் இவரது படங்கள் அனைத்தும் ரசிகர்களை கவர்ந்து பெருமளவில் பிரபலமானது.

vijay antony

இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்றது. அப்பொழுது பொதுமக்கள், திரையுலகப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளனர். அப்பொழுது நடிகர் விஜய் ஆண்டனி அவரது மனைவி பாத்திமாவுடன் சென்று வாக்களித்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனைக் கண்ட ரசிகர்கள் விஜய் ஆண்டனியின் மனைவியா இது! பப்ளியா செம க்யூட்டா இருக்கிறார் எனக் கூறி வருகின்றனர்.