விஜய் ஆண்டனியுடன் இணையும் பிரபல நடிகர்! வெளியான புகைப்படத்தால் உற்சாகத்தில் ரசிகர்கள்.!
விஜய் ஆண்டனியுடன் இணையும் பிரபல நடிகர்! வெளியான புகைப்படத்தால் உற்சாகத்தில் ரசிகர்கள்.!

தமிழில் இசையமைப்பாளராக இருந்து நடிகராக களமிறங்கி பல வெற்றி படங்களை கொடுத்து வருபவர் விஜய் ஆண்டனி. இவர் பிச்சைக்காரன், கொலைகாரன், அக்னி சிறகுகள் ஆகிய படங்களை தொடர்ந்து தற்போது தமிழரசன் மற்றும் காக்கி என்ற படங்களில் நடித்து வருகிறார்.
இதில் இதில் தமிழரசன் படத்தை பாபு யோகேஸ்வரன் இயக்க, விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். அதனை தொடர்ந்து சோனு சூட், பூமிகா, ரோபோ சங்கர், யோகி பாபு, முனீஷ்காந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். மேலும் எஸ்.என்.எஸ் மூவிஸ் சார்பில் கௌசல்யா ராணி இப்படத்தை தயாரிக்கிறார்.
இந்நிலையில் படத்தில் விஜய் ஆண்டனி உடன் மலையாள நடிகர் சுரேஷ் கோபி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். சுரேஷ் கோபி 'ஐ' படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இந்நிலையில் விஜய் ஆண்டனி டாக்டர் தோற்றத்தில் உள்ள சுரேஷ் கோபியுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.