அச்சச்சோ.. இறுதிக்காட்சியில் விபத்தில் சிக்கிய விஜய் ஆண்டனி..! மறைத்ததன் காரணம் என்ன?.!  

அச்சச்சோ.. இறுதிக்காட்சியில் விபத்தில் சிக்கிய விஜய் ஆண்டனி..! மறைத்ததன் காரணம் என்ன?.!  


vijay antony accident news gone viral

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகிய பிச்சைக்காரன் திரைப்படம் அமோக வெற்றி அடைந்த நிலையில், அதன் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி விறுவிறுப்பாக படப்பிடிப்புகள் நடைபெற்று வந்தன. 

மலேசியாவில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது நடிகர் விஜய் ஆண்டனி காயமடைந்ததாக  செய்திகள் வெளியாகிய நிலையில், அவர் மீண்டும் குணம் அடைந்து வந்தார். மேலும் பிச்சைக்காரன் 2 படத்தில் விஜய் ஆண்டனி, காவியா தப்பார், ராதாரவி, ஒய் ஜி மகேந்திரன், மன்சூர் அலிகான், யோகி பாபு உட்பட பலரும் நடித்தனர். 

vijay antony

இந்த படம் மே 19-ஆம் தேதியான இன்று திரையரங்கில் வெளியானது. இந்த படத்தில் விஜய் ஆண்டனியே இயக்கி, இசையமைத்து நடித்துள்ளார். இந்த படத்தில் உள்ள கள் ஊரும் பூவே என்ற பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்ட நிலையில், இந்த பாடலின் இறுதி காட்சியில் நடிக்கும்போது தனக்கு விபத்து ஏற்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.