சினிமா

தளபதி விஜய் மகன் எடுக்க போகும் புதிய அவதாரம்...! உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்...!

Summary:

vijay-all-credits-goes-to-his-son

தளபதி விஜய் மகன் எடுக்க போகும் புதிய அவதாரம்...! உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்...! 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய் ஆவார். இவரது மகனும் தற்போது நடிப்பில் ஈடுபட்டு வருகிறார். தளபதி விஜயின் மகன் விஜய் நடித்த படம் வேட்டைக்காரன் படத்தில் "நா அடிச்ச தங்கமாட்ட" ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடியது குறிப்பிடத்தக்கது. அந்த பாடல் மூலமாக அவர் ரசிகர்களை கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.  

அதன்பிறகு எந்த படத்திலும்  நடிக்காத சஞ்சய், சமீபத்தில் ஒரு குறும்படம் ஒன்றில் நடித்து அதனை இணையத்தில் வெளியிட்டார்கள். அது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர் இன்னும் சில ஆண்டுகளில் கதாநாயகனாக சினிமாவில் களம் இறங்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் விஜய் ரசிகர்கள் அனைவருமே மிகவும் உற்சாகத்தில் இருக்கின்றனர். 

மேலும் இவருக்கு  நடனம், சண்டை ஆகியவற்றிற்கு முழுமையாக பயிற்சி கொடுக்கப்பட்டு தற்போது முழுத் திறமையுடன் களமிறங்கவுள்ளதாக தெரிவிக்கின்றனர். மேலும் இளைய தளபதி பட்டத்தை தன் மகனுக்கு கொடுக்கப் போவதாக கூறினார்.

தளபதி விஜய் அவர்களின் மகன் சஞ்சய் நடிக்க வருவது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், அவர் படத்தில் நடிக்க வந்தால் தளபதியை விட அதிகமாக ரசிகர்கள் இருக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் ரசிகர்கள் அவரவர் சமூக வலைதளப்பாக்கத்தில் பதிவு செய்து வருகிறார்கள். 


Advertisement