தமிழகம் சினிமா

பூஜையுடன் தொடங்கியது தளபதி # 63 ; வெளியான புகைப்படங்களால் ரசிகர்கள் உற்சாகம்.!

Summary:

vijay 63 movie director adlie - actor kathir - today poojai

இளைய தளபதி விஜய் நடிக்கும் 63வது படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளதால் அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

தெறி, மெர்சல் வெற்றிப்படங்களை தொடர்ந்து இளையதளபதி விஜய்யின் 63ஆவது படத்தை மீண்டும் அட்லி இயக்க உள்ளார். ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாரா தேர்வாகியுள்ள நிலையில் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று முடிந்துள்ளது. 

நயன்தாராவை தொடர்ந்து பரியேறும் பெருமாள் புகழ் கதிர் மற்றும் சர்க்காரில் விஜயுடன் நடித்த யோகி பாபு இந்த படத்தில் இணைந்துள்ளனர். கால்பந்து ஆட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்த படத்தில் உண்மையிலேயே தேசிய அளவு கால்பந்து வீரரான யோகி பாபு இணைந்திருப்பது சிறப்பு.  

இதனை தொடர்ந்து நீண்ட நாட்களுக்கு பிறகு விசுவாசம் படத்தில் ஒரு காமெடியனாக தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் விவேக் தளபதி 63 படத்திலும் நடிக்க உள்ளார் என்பதை படக்குழு அறிவித்துள்ளது. நயன்தாரா, யோகி பாபு, விவேக் ஆகிய மூவருமே விஸ்வாசம் படத்தில் அஜித்துடன் நடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 


Advertisement