
Vijakanth house and college auctioned for bank loan
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்தவர் கேப்டன் விஜயகாந்த். ரஜினி, கமல் போன்ற நடிகர்களுக்கே போட்டியாக இருந்தவர். இவரது அனல் பறக்கும் சண்டை காட்சிகள், வசனம் இவற்றிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். தற்போது சினிமாவில் இருந்து வெளியேறி முழுநேர அரசியலில் ஈடுபட்டு வருகிறார் கேப்டன் விஜயகாந்த்.
இந்நிலையில் விஜயகாந்த் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வாங்கிய 5 கோடியே 52 லட்சத்து 73 ஆயிரத்து 825 ரூபாய் கடனை திருப்பி தராததால் அவரது 100 கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு மற்றும் கல்லூரி ஏலத்துக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள காவேரி தெரு, மற்றும் வேதவள்ளி தெருவில் உள்ள விஜயகாந்துக்கு சொந்தமான சொத்துக்கள் மற்றும் ஆண்டாள் அழகர் கல்லூரியும் ஏலத்துக்கு வருவதாக அறிவிக்கப்ட்டுள்ளது.
ஏலத்துக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ள விஜயகாந்தின் வீடு மற்றும் கல்லூரியின் புகைப்படம் இவைதான்.
Advertisement
Advertisement