சினிமா

கேப்டன் கூல் நீங்கதான் அமைதிக்கான ஸ்கூல்!! தல தோனிக்காக, விக்னேஷ் சிவன் வெளியிட்ட அசத்தல் கவிதை!

Summary:

Vignesh sivan tweet for mahendra singh dhoni

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த செய்தி தோனி  ரசிகர்களுக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் கிரிக்கெட் வீரர்கள், திரைப் பிரபலங்கள் நடிகர்கள் என பலரும் அவரை புகழ்ந்து வாழ்த்தி பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். 

இந்நிலையில் தோனியின் தீவிர ரசிகனான இயக்குனர் விக்னேஷ் சிவன் அவரை பாராட்டி ஆங்கிலத்தில் கவிதை ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

அதில் டியர் மகேந்திர சிங். நீங்கள்தான் எங்கள் அனைவருக்கும் ராஜா. 
டியர் 7,  அந்த 11 பேரில் நீங்கள்தான் சிறந்தவர். டியர் கேப்டன் கூல், நீங்கதான் எப்பவும் அமைதிக்கான ஸ்கூல். டியர் எம்.எஸ் நாங்கள் உங்களை இனி ரொம்ப மிஸ் செய்வோம். டியர் மாஹி பாய்.. நீங்கள் நீல சீருடைக்கு பாய் சொல்லியிருக்கலாம். ஆனால் மஞ்சள் சீருடைக்கு எப்பவுமே ஹாய்! டியர் தோனி.. உங்களுக்காக சூப்பர் பயணம் காத்திருக்கிறது என பதிவிட்டுள்ளார்.

விக்னேஷ் சிவன் 2018 ஆம் ஆண்டு தனது வாழ்நாள் கனவு நிறைவேறி விட்டதாக தோனியுடன் எடுத்த புகைப்படத்தை மிகவும் உற்சாகத்துடன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 


Advertisement