சினிமா

"நயன்தாரா நீங்க நினைக்கிற மாதிரி இல்ல!" விக்னேஷ் சிவன் ஓபன் டாக்

Summary:

vignesh sivan about nayanthara

சமீபத்தில் நடிகை நயன்தாராவுடன் நெருக்கமாக இருந்து வருபவர் இயக்குனர், பாடலாசிரியர் என பல பரிமாணங்களை கொண்டுள்ள விக்னேஷ் சிவன். இவர் ஒரு தனியார் இணையதளத்திற்கு அளித்துள்ள பேட்டியில் நயன்தாரா நிஜவாழ்க்கையில் எப்படிப்பட்டவர் என்பதை தெரிவித்துள்ளார்.

சொந்த வாழ்க்கையில் பல சோதனைகள் வந்தாலும் அவை அனைத்தையும் தாண்டி இன்று திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவரது படங்கள் சமீபகாலமாக தொடர் வெற்றியை பெற்று வருகின்றன. 

தொடர்புடைய படம்

ஹீரோ யாராக இருந்தாலும் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் நயன்தாரா. அப்படி தேர்வு செய்து நடித்த படங்களான அறம், கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள், போன்ற படங்கள் இவருக்கு மாபெரும் வெற்றியை கொடுத்துள்ளது. மேலும் இவர் ஐரா, கொலையுதிர் காலம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

திரைத்துறையில் எவ்வளவுதான் உச்சத்திற்கு சென்றாலும் இவரது சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட காயங்கள் எப்போதும் நீங்கா வடுவாகவே இருந்து வருகிறது. இதனால் இவரை பற்றிய விமர்சனங்களுக்கும் குறைவில்லை. நயன்தாராவின் சொந்த வாழ்க்கையில் பல இன்னல்களை அவர் சந்தித்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. 

தொடர்புடைய படம்

இப்படி பல தடைகளை தாண்டி வந்த நயன்தாராவிற்கு இன்று உறுதுணையாகவும், பக்கபலமாகவும் இருந்து வருபவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். இவர்கள் இருவரைப் பற்றியும் பல தவறான விமர்சனங்கள் எழுந்து கொண்டேதான் இருக்கின்றன. இருந்தாலும் என்ன செய்வது அனைத்தையும் தாங்கிக் கொள்ள வேண்டும் தான் என விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். மேலும் எதிர்மறையான கருத்துகளை மனதில் ஏற்காமல் ஓரமாக ஒதுக்கி வைப்பது சிறந்தது எனவும் கூறியுள்ளார்.

விக்னேஷ் சிவன் இணையதளத்திற்கு அளித்துள்ள பேட்டியில் நயன்தாராவை பற்றிய கேள்விக்கு பதிலளிக்கையில், "நயன்தாரா ஒரு மிகச் சிறந்த ஆளுமை திறன் கொண்ட பெண்; அவருடன் நான் இப்பொழுது இருப்பதை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். ஒரு மனிதராக அவர் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கக் கூடிய வல்லமை கொண்டவர். ஒரு பெண்ணாக அவரது வாழ்க்கையில் எவ்வளவோ கவலைகள் சோகங்கள் இருந்துள்ளன இருந்தாலும் அவை அனைத்தையும் தாண்டி தன்னுடைய குறிக்கோள் என்ன என்பதை மட்டுமே மனதில் வைத்து தன்னுடைய வாழ்க்கையில் வெற்றி பெற்று வருகிறார். அவர் ஒரு வலிமையான இதயம் படைத்த பெண்களில் ஒருவர். நான் அவர் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன்" என கூறியுள்ளார்.


Advertisement