அடேங்கப்பா.. மாமனார் வீட்டில் ஒரே கொண்டாட்டம்தான்! முதன் முதலாக விக்னேஷ் சிவன் வெளியிட்ட சூப்பர் புகைப்படம்!



vignesh-shivan-with-nayanthara-photo-viral

தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட், பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் நடித்து லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இந்தியளவில் பிரபலமாக இருக்கும் இவருக்கென முன்னணி ஹீரோக்களுக்கு இணையாக பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அவர் நானும் ரவுடிதான் என்ற படத்தில் நடித்த போது அதன் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதலில் விழுந்தார்.

இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வருகின்றனர். மேலும் இருவரும் ஒன்றாக சுற்றுலா செல்வது, கோயில்களுக்குச் செல்வது என பிஸியாக இருந்து வருகின்றனர். அந்தப் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகும்.

இந்நிலையில் நயன்தாரா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சமந்தாவுடன் இணைந்து நடித்துள்ளார்.இப்படம் ஏப்ரல் 28ல் ரிலீசாகவுள்ளது. இந்த நிலையில் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நயன்தாராவின் அப்பாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி நயன்தாராவின்  அம்மா மற்றும் அப்பாவுடன் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.