சினிமா

அந்த விஷயம் எப்போ போர் அடிக்கிதோ அப்போதுதான் நயன்தாராவுடன் கல்யாணம்..! விக்னேஷ் சிவன் பதில்.

Summary:

Vignesh shivan talks about marriage with Nayanthara

நயன்தாராவுடன் எப்போது திருமணம் என்ற கேள்விக்கு லவ் எப்போது போர் அடிக்கிறதோ அப்போது நாங்கள் திருமணம் செய்து கொள்வோம் எனத் தெரிவித்துள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் காதலிப்பது உலகமறிந்த விஷயம். இருவரும் ஒன்றாக ஊர் சுற்றுவது, வீடியோ எடுப்பது, புகைப்படம் எடுப்பது என்பது வழக்கமான ஒன்று. தற்போது கொரோனா ஊரடங்கு என்பதால் எங்கும் வெளியே செல்ல முடியாததால் வீட்டிலையே முடங்கி உள்ளனர்.

நயன்தாரா நீங்க நினைக்கிற மாதிரி ...

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில்  தங்களின் திருமணம் குறித்து பதிலளித்துள்ளார் விக்னேஷ் சிவன். அதில் எங்களுக்கு லவ் எப்போது போர் அடிக்கிறதோ அப்போது நாங்கள் திருமணம் செய்து கொள்வோம் எனத் தெரிவித்துள்ளார். இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.


Advertisement