சினிமா

இதுதான் முதல் முறை! நயன்தாரா மற்றவருடன் ஜோடியாக நடிப்பது குறித்து ஓபனாக போட்டுடைத்த விக்னேஷ் சிவன்! ஷாக்கான ரசிகர்கள்!

Summary:

தமிழ் சினிமாவில் சரத்குமார் நடிப்பில் வெளிவந்த ஐயா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமா

தமிழ் சினிமாவில் சரத்குமார் நடிப்பில் வெளிவந்த ஐயா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார் நடிகை நயன்தாரா. அதனை தொடர்ந்து அவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான ஹிட் படங்களில் நடித்து தற்போது லேடி சூப்பர் ஸ்டாராக ஜொலித்து வருகிறார்.

தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கும் நடிகை நயன்தாரா பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். இருவரும் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது, ஒன்றாக புகைப்படங்களை வெளியிடுவது என  உள்ளனர். மேலும் இருவருக்கும் எப்பொழுது திருமணம் என ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவல் நிலவி வருகிறது.ஆனால் நயன்தாரா தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது ரஜினியின் அண்ணாத்த மற்றும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் நடிகை சமந்தாவும் நடித்து வருகிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித்குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 

இந்த நிலையில் காத்துவாக்குல ரெண்டு காதல் போஸ்டரை இன்ஸ்டாராமில் பகிர்ந்த விக்னேஷ் சிவன் , என் நயன்தாரா நயன்தாரா இன்னொருவருக்கு ஜோடியாக நடிப்பதைப் பார்த்து முதல்முறையாக நான் பொறாமைப்படவில்லை என்று  பதிவிட்டுள்ளார். மேலும் அவர் சமந்தா மிகவும் அற்புதமானவர் எனவும் குறிப்பிட்டுள்ளார். அதனை கண்ட ரசிகர்கள் அப்போ மற்றவர்களுடன் நடிக்கும்போது பொறாமைபட்டுள்ளீர்களா என ஷாக்காகியுள்ளனர்.


Advertisement