சினிமா

இரவில் நயன்தாராவிற்கு இப்படியொரு பழக்கம் இருக்கு.. ரகசியத்தை ஓபனாக போட்டுடைத்த விக்னேஷ் சிவன்!

Summary:

தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக, லேடி சூப்ப

தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக, லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவருக்கு நடிகர்களுக்கு இணையாக பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. நயன்தாரா கைவசம் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல், நெற்றிக்கண், அண்ணாத்த போன்ற திரைப்படங்கள் உள்ளன.

நடிகை நயன்தாரா நானும் ரவுடிதான் படத்தில் நடித்தபோது அதன் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் வசப்பட்டார். அதனைத் தொடர்ந்து நீண்ட ஆண்டுகளாக சின்சியராக காதலித்து வருகின்றனர். மேலும் இருவரும் அடிக்கடி வெளிநாடுகளுக்கு செல்வது, ஒன்றாக  இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவது என உள்ளனர். இந்த நிலையில் ரசிகர்கள் பலரும் அவர்களது திருமணத்திற்காக காத்திருக்கின்றனர்.

சமூகவலைதளங்களில் பிஸியாக இருக்கும் விக்னேஷ் சிவன் லைவ் சாட்டில் அவ்வப்போது ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளிப்பார். இந்நிலையில் சமீபத்தில் ரசிகர் ஒருவர், உங்களுக்கும் நயன்தாராவுக்கு மட்டும் தெரிந்த ரகசியம் என்ன? என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு விக்னேஷ் சிவன், நயன்தாரா இரவு உணவு முடிந்த பிறகு அனைத்து பாத்திரங்களையும் அவரே சுத்தம் செய்து வைப்பார் என கூறியுள்ளார். 


Advertisement