இயக்குனர் வெங்கட் பிரபுவா இது.! என்ன இப்படி மோசமாக ஆகிட்டாரே.! ரசிகர்களை ஷாக்காக்கிய புகைப்படம்!!venkat-prabu-weight-loss-photo-viral

தமிழ் சினிமாவில் சென்னை 28, சரோஜா, கோவா, மங்காத்தா, மாநாடு போன்ற வெற்றி திரைப்படங்களை இயக்கி பிரபல இயக்குனராக வலம் வருபவர் வெங்கட் பிரபு. அவர் பல படங்களில் காமெடி நட்சத்திரமாகவும், துணை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். வெங்கட் பிரபு தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் நடிகர் நாக சைதன்யாவை ஹீரோவாக வைத்து கஸ்டடி என்ற படத்தை இயக்கியுள்ளார். 

இதில் ஹீரோயினாக, நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். இந்தப் படம் அடுத்த மாதம் ரிலீசாகவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. கஸ்டடி படத்தின் பேக்ரவுண்ட் இசைக்காக துபாயில் யுவன் சங்கர் ராஜாவுடன் வெங்கட் பிரபு தீவிரமாக செயல்பட்டுள்ளார்.

yuvan shankar raja

அப்போது யுவன் சங்கர் ராஜாவுடன் வெங்கட் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் வெங்கட் பிரபு உடல் நன்கு மெலிந்து ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறி உள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.