நடந்தா செம மாஸா இருக்குமே.! அஜித், விஜய் மட்டும் ஓகே சொன்னா.. இயக்குனர் வெங்கட் பிரபுவின் அசத்தல் பிளான்!!

நடந்தா செம மாஸா இருக்குமே.! அஜித், விஜய் மட்டும் ஓகே சொன்னா.. இயக்குனர் வெங்கட் பிரபுவின் அசத்தல் பிளான்!!


venkat-parabhu-try-to-make-mangattha-2-with-ajith-and-v

தமிழ் சினிமாவில் ஏராளமான மாஸ், பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் நடித்து டாப் ஸ்டார்களாக வலம் வருபவர்கள் விஜய் மற்றும் அஜித். அவர்கள் இருவருக்கும் ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அவர்களது படங்கள் ஒவ்வொன்றையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அஜித் மற்றும் விஜய் இருவரும் ஒன்றாக இணைந்து கடந்த 1995 ஆம் ஆண்டு ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் நடித்திருந்தனர்.  

இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. அதனைத் தொடர்ந்து இருவரும் தனித்தனியே படங்களில் நடித்து வருகின்றனர். ஆனாலும் இருவரும் இணைந்து எப்பொழுது ஒன்றாக நடிப்பார்கள் என்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. இயக்குநர் வெங்கட்பிரபுவும் அவர்கள் இருவரையும் ஒன்றாக இணைத்து படமெடுக்க முனைப்பு காட்டி வருகிறார்.

Ajith

இந்நிலையில் குறும்பட விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் இதுகுறித்து கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவர் விஜய், அஜித் இருவரையும் ஒன்றாக திரையில் காணவேண்டும் என்பது  ரசிகனாக எனக்கும் ஆசையாக உள்ளது. இதுகுறித்து அவர்களிடமே சொல்லிவிட்டேன். அவர்களுக்கும் அந்த ஆசை உள்ளது. ஆனால் எப்பொழுது அது நிறைவேறும் என உங்களை போல நானும் காத்திருக்கிறேன். இருவரும் ஓகே சொல்லிட்டா கண்டிப்பா மங்காத்தா 2 பெருசா பண்ணிடலாம் என கூறியுள்ளார்.