சினிமா

வாத்தி கம்மிங்..! வேற லெவலில் மாஸ்டர் படைத்த சாதனை! செம ஹேப்பியில் கொண்டாடும் ரசிகர்கள்!

Summary:

மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடல் யூடியூபில் 25 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி மற்றும் ஆண்ட்ரியா, மாளவிகா மோகன், மகேந்திரன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், ஸ்ரீமன், சஞ்சீவ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

மாஸ்டர் படப்பிடிப்பு முடிவடைந்ததும் கொரோனா பிரச்சனையால் ரிலீஸாவது தள்ளிப்போய் கொண்டிருந்த நிலையில், ஒருவழியாக பொங்கல் தினத்தை முன்னிட்டு படம் அனைத்து தியேட்டர்களிலும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. மேலும் வசூல் சாதனையும் குவித்தது. 

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டி யெல்லாம் ஒலித்து அனைவரையும் ஆட வைத்தது. அதிலும் வாத்தி கம்மிங் பாடல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பெருமளவில் கவர்ந்தது. மேலும் அதில் விஜய் ஆடும் நடனம் அனைவரையும் ரசிக்க வைத்தது. இந்நிலையில் வாத்தி கம்மிங் பாடல் யூடியூபில் 25 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.  இதனை சோனி மியூசிக் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.


 


Advertisement