சினிமா

மீண்டும் திரைக்கு வர இருக்கும் வசந்தமாளிகை திரைப்படம்...!

Summary:

VasanthaMaaligai-Gets-Digitalized

அந்த காலத்தில் மிகவும் கலக்கிய படங்களில் ஒரு படம் தான் வசந்த மாளிகை. இந்த படத்தில் நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் மிகவும் அருமையாக நடித்தது அனைவருக்கும் தெரிந்ததே. இந்நிலையில் இந்த படம் மீண்டும் திரைக்கு டிஜிட்டல் தொழில்நுட்ப முறையில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இப்படம் கடந்த 1972ம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன், வாணி ஸ்ரீ, நாகேஷ், பாலாஜி, மேஜர் சவுந்தரராஜன் போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர்.  டி.ராமநாயுடு தயாரிப்பில் கே.எஸ்.பிரகாஷ் ராவ் இயக்கத்தில் உருவான இப்படத்துக்கு கே.வி.மகாதேவன் இசையமைத்திருந்தார்.

இந்த படத்திற்கு கவியரசு கண்ணதாசன் பாடல் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் பாடல்கள் அனைத்துமே மெகா ஹிட் ஆனது அனைவருக்கும் தெரிந்ததே. அன்றைய காலகட்டத்தில் கலரில் வந்து வெள்ளிவிழா கொண்டாடிய திரைப்படம் தான் வசந்த மாளிகை. 


தற்போது இந்த படம் மீண்டும் டிஜிட்டல் தொழில்நுட்ப முறையில் வி.சி.குகநாதன் மேற்பார்வையில் புத்தம் புதிய பரிமாணத்தில் தாயாராகி வருகிறது. இந்த படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் அதிக திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளது. 


Advertisement