மாஸ் பக்கா மாஸ்... செம மாஸாக வெளியான வாரிசு ட்ரைலர்... உற்சாகத்தில் ரசிகர்கள்!!

மாஸ் பக்கா மாஸ்... செம மாஸாக வெளியான வாரிசு ட்ரைலர்... உற்சாகத்தில் ரசிகர்கள்!!


Varisu trilaer released today

பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் வாரிசு. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் விஜயுடன் சங்கீதா, ஷியாம், பிரகாஷ்ராஜ், சரத் குமார் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் பலர் வாரிசு படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  

இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இப்படத்தின் வருகைக்காக ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நிறைவடைந்தது. 

இந்நிலையில் ரசிகர்கள் வாரிசு படத்தின் ட்ரைலர் புத்தாண்டு ஸ்பெஷலாக வெளியாகும் என எதிர்பார்த்திருந்த நிலையில் சென்சார் பணிகள் நிறைவடையாததால் இன்று மாலை 5 மணியளவில் வெளியாகியுள்ளது.