திருமண நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட வரலட்சுமி .! வாயடைத்து போன ரசிகர்கள்.! வேற லெவல் வீடியோ.!

திருமண நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட வரலட்சுமி .! வாயடைத்து போன ரசிகர்கள்.! வேற லெவல் வீடியோ.!



varalaksmi-dance-for-vathi-coming-song

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன் , சாந்தனு, அர்ஜூன் தாஸ் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் தான் மாஸ்டர். இப்படம் ரசிகர்களிடையே பேராதரவை பெற்று இந்த வருடத்தின் ஹிட் திரைப்படமாக அமைந்தது.

இப்படத்தில் இடம் பெற்ற வாத்தி கம்மிங் பாடல் வேற லெவல்.  பட்டிதொட்டி எங்கும் பிரபலமாகி அனைவரையும் ஆடவைத்துள்ளது. அப்பாடலுக்கு ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், சமீபத்தில் பிரபல நடிகை வரலட்சுமி சரத்குமார், திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று, அந்த நிகழ்ச்சியில் "வாத்தி கம்மிங் பாடலுக்கு" மிக அருமையாக ஒரு குத்தாட்டம் போட்டுள்ளார். மேலும் இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த வீடியோ ரசிகர்களிடைய வேகமாக பரவி வருகிறது.