சர்க்கார்.. வைரலாகும் வரலட்சுமியின் வீடியோ..!
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள சர்க்கார் படமானது, வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இதனையடுத்து இதற்காக ரசிகர் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். அதுமட்டுமல்லால் அவ்வப்போது அப்டேட்கள் வெளி வந்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
இந்நிலையில் இப்படத்தின் டீசர் ஆயுதபூஜைக்கு வெளியாகும் என தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்நிலையில் சர்க்கார் படப்பிடிப்பில் கலந்துகொண்ட அனுபவத்தினை பற்றி தன் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வீடியோ ஒன்றை வரலட்சுமி சரத்குமார் வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் "எனக்கு இந்த படத்தில் மிகவும் சிறப்பானதொரு கதபாத்திரத்தை கொடுத்திருக்கும் இயக்குனர் முருகதாஸ் அவர்களுக்கு கட்டாயம் நன்றி தெரிவிக்க வேண்டும் மேலும் நடிகர் விஜய் உடன் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவாக இருந்தது. அதுவும் இப்பொழுது இயக்குனர் முருகதாஸ் அவர்களால் நிறைவேறியுள்ளது.
மேலும் இந்த சர்க்கார் படத்தின் மூலம் என்னுடைய நான்கு கனவுகள் ஒரே நேரத்தில் நிறைவேறியுள்ளது" என்பதனையும் அவர் தெரிவித்துள்ளார். இந்த கனவுகள் என்னவென்பதை வீடியோவில் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
Actress @varusarath shares her experience from the sets of #Sarkar.#SarkarKondattam pic.twitter.com/fE0rlCjegj
— Sun Pictures (@sunpictures) October 9, 2018